2 ஏடிஜிபிக்கள் உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழக உத்தரவு...

தமிழக காவல்துறையில் 2 ஏடிஜிபிக்கள் உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
2 ஏடிஜிபிக்கள் உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழக உத்தரவு...
Published on: 
Updated on: 
1 min read

திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண் சென்னை போலீஸ் பயிற்சி மைய கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிதாக கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய் குமார் சிங் ஆயுதபடை ஏடிஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விடுமுறையில் இருந்த மகேந்திர குமார் ரத்தோட் சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார். டிஐஜி சரவண சுந்தர் திருச்சி சரக டிஐஜியாகவும், ராதிகா ஜெனரல் டிஐஜியாக மாற்றப்பட்டார்.

விடுப்பில் இருந்த எஸ்.பி நிஷா கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பியாகவும், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பியாக இருந்த மாடசாமி சேலம் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு  துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த வேதரத்தினம் விரிவாக்கபிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com