
கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் விபத்து.எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பள்ளி குழந்தைகள் 3 பேர் உயிரிழப்பு என முதற்கட்ட தகவல்.
பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்:
கடலூர்,செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து சம்பவ இடத்திற்கு விரைந்தது ரயில்வே பாதுகாப்பு குழு. குறிப்பிட்ட நேரத்தில் கேட் கீப்பர் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் இதுவரை 6 -பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியபோது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.