"அதிமுக-வை இயக்கும் பாஜக" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் பரபரப்பு

அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை யார் போடுகிறார்?
thangam thennarasu latest speech
thangam thennarasu latest speechAdmin
Published on
Updated on
2 min read

அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை யாரோ ஒருவர் எங்கிருந்தோ போடுகிறார் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் அவ்வாறு பேசுவதற்கு என்ன காரணம் அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை யார் போடுகிறார் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி அதிமுகவில் நிகழ்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் வித்திட்டது இயக்கியது பாஜக தான் என அப்போதே எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் குற்றம் சாட்டினர்.

அதன் பின்பு நான்கரை வருடம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நடைபெற்றது பாஜகவின் தயவு தான் என திமுக விமர்சனம் செய்தது.

இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து களம் கண்டு ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் அதிமுக ஆட்சி அமையாமல் போனதற்கு பாஜகவுடன் கூட்டணி தான் காரணம் என அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களே குற்றம் சாட்டி பேசி வந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி இல்லை இனிமேல் அவர்களுடன் ஒட்டும் உறவும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

மேலும் படிக்க: தமிழிசை பேசிய பஞ்ச் டயலாக்...சூசகமாக சொன்ன மெசேஜ் இது தான்

அதன் பின்பு அதிமுக மூத்த தலைவர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை பாஜகவை வறுத்தெடுத்தனர் அதற்கு அண்ணாமலை உட்பட பாஜகவினரும் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை என அதிமுகவை புரட்டி எடுக்கும் வேளையில் மத்திய பாஜக அரசின் துறைகள் செயல்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சேலத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது எனக் கூறி அதிர வைத்தார்.

மேலும் படிக்க: கூட்டணிக்கு காத்திருக்கும் பாஜக...ஆனால் அதிமுக.,வின் பிளானே வேற...

இதனைத் தொடர்ந்து அதிமுகவை பாஜக நெருங்குகிறது என்ற செய்தி இறக்கை கட்டி பறக்க, அதனை வழிமொழிவது போல இதுவரை பாஜகவினரை விமர்சனம் செய்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூட பாஜக மீதான விமர்சனங்களை தவிர்த்து அவர்களுக்கு ஏற்றார் போல் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான் சட்டப்பேரவையில் பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவினர் சட்டப்பேரவையில் ஒரு கணக்கை போட்டால் அவர்களின் எதிர்காலம் குறித்த கூட்டல் கழித்தல் கணக்குகளை யாரோ ஒருவர் எங்கிருந்தோ ஓடுகிறார் என பற்ற வைத்தார்.

மேலும் படிக்க: இன்னும் இருபதே நாள்.. விஜய் எடுக்கப் போகும் "புது அவதாரம்".. டெல்லியில் இருந்து நள்ளிரவு 2.53 மணிக்கு வந்த கட்டளை!

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் ஒரு படி முன்னே சென்று அவையில் இருக்கும் வானதி சீனிவாசன் சிரிக்கிறார் பூனைக்குட்டி வெளியே வந்தது என மறைமுகமாக பாஜகவே குறித்து கூறினார்.

இதற்கு பெரிய அளவில் எதிர்வினை ஆற்றாத அதிமுகவினர் அவர்கள் முதுகில் இருக்கும் அழுக்கை பார்க்கட்டும் பின்பு எங்களை சொல்லட்டும் என கடந்து சென்றனர்.

தங்கம் தென்னரசு கருத்து குறித்து பாஜக துணை தலைவர் கரு நாகராஜன், யாருடைய கூட்டல் கழித்தல் கணக்குகளை எழுத வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை இவர்கள்தான் தப்பான கழித்தல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பூனைக்குட்டி வெளியே வந்ததாக அவர் சொல்கிறார் இன்னும் சில நாட்களில் புலியே வெளியே வர போகிறது

"அதிமுக-வை இயக்கும் பாஜக" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் பரபரப்புயே வரப்போகிறது என அதிர வைத்தார்.

கரு நாகராஜன், பாஜக

அதே நேரத்தில் அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு ஒருவர் போட வேண்டிய அவசியம் இல்லை என அதிமுகவின் இன்பதுரை கூறுகிறார்..

இன்பதுரை, அதிமுக

அதே நேரத்தில் திமுகவை பாஜக தான் இயக்குகிறது என்பதுதான் உண்மை பூனைக்குட்டி வெளியே வந்தால் நரிகளுக்கு என்ன வந்தது என திமுகவை பார்த்து இன்ப துரை கேள்வி எழுப்புகிறார்...

இன்பதுரை, அதிமுக

யார் யாரை இயக்குகிறார்கள் என்பது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தெரியவரும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது

மாலை முரசு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் பிரித்திவிராஜுடன் செய்தியாளர் ராஜேஷ்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com