தஞ்சை - பொங்கல் பானையில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..!

தஞ்சை - பொங்கல் பானையில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..!
Published on: 
Updated on: 
1 min read

தஞ்சையில் பொங்கல் பானையில் கஞ்சி தொட்டி திறந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் கண்டியூர், திருப்பந்துருத்தி உள்ளிட்ட பகுதிகள் மா, பலா, வாழை என முக்கனிகளும் குருவை, சம்பா, தாளடி என முப்போகமும் விளையக்கூடிய செழிப்பான பகுதியாகும்.

இப்பகுதியில் நிலங்களை அழித்துவிட்டு திருவையாறு புறவழிச்சலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் திருநாளான நேற்று, வயலில் கருப்புக் கொடி கட்டி, பொங்கல் பானையில் கஞ்சி தொட்டி திறந்து, சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மகிழ்ச்சியான பொங்கல் பண்டிகை சோகத்தில் முடிந்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com