ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை செய்யும் வீடியோ - சமுக வலைதளங்களில் வைரல்

நான் பணம் தருகிறேன் அதற்கு நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் எனக்கு..
sexual harassment
sexual harassmentAdmin
Published on
Updated on
1 min read

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பர்வின் திரையரங்கு பகுதி அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கிய சாமி இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இவர் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே குறி வைத்து வட்டிக்கு பணம் தருவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.நேற்று முன்தினம் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஆரோகிய சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது குடும்பம் கஷ்டத்தில் உள்ளது எனக்கு 15000 பணம் வட்டிக்கு தரும்படி கேட்டுள்ளார்.அதற்கு ஆரோக்கிய சாமி நான் பணம் தருகிறேன் அதற்கு நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் எனக்கு மனைவி இல்லை ஆதலால் என்னிடம் நீ உல்லாசமாக இருந்தால் போதும் நீ அந்த பணத்தை தர வேண்டாம் என கூறியதற்கு அந்த பெண் நான் வட்டிக்கு தான் பணம் கேட்டேன் அதற்காக நீங்கள் இப்படி அசிங்கமாக பேசலாமா என சொல்லி தொலைபேசியை துண்டித்து உள்ளார் பிறகு நான் உனது வீட்டிற்கு வருகிறேன் என மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார் இதனால் விளிப்படைந்த அந்த பெண் தனக்கு எதுவும் நேரலாம் என தனது தொலைபேசியில் ரெக்கார்டு செய்த படி தொலைபேசியை ஒரு இடத்தில் மறைவாக வைத்து அவர் பேசியதை பதிவு செய்துள்ளார் அதில் அவர் நாம் உல்லாசமாக இருக்கலாம் நீ எனக்கு எந்த பணமும் தர வேண்டாம் வா என வலுக்கட்டாயமாக இருக்கி அனைத்து கட்டிப்பிடித்து அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி உள்ளார் உடனே அந்த பெண் எதற்காக இந்த மாதிரி செய்தீர்கள் பணம் வட்டிக்கு தந்தால் தாருங்கள் இல்லையென்றால் இங்கிருந்து கிளம்புங்கள் என திட்டி வெளியே அனுப்பி உள்ளார் இது போல் அவர் நிறைய பெண்களிடம் பணம் தருவதாக சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com