தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது.
நெல் மற்றும் கரும்பு கைக்கொடுக்காத நிலையில், குறைந்த நீரில் அதிக லாபத்தில் காய்கறிகள் கைக் கொடுப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார் விவசாயி குமரேசன்.
அதற்கு அடுத்து கரும்பு விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை சீற்றம், தண்ணீர் பற்றாக்குறை இதன் காரணமாக நெல். கரும்பு விவசாயத்தில் நஷ்டத்தை சந்தித்த வல்லம்புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரேசன் தனது 5 ஏக்கர் நிலத்தில் நெல், கரும்புக்கு மாற்றாக காய்கறிகள் பயிரிட துவங்கினார்.
பாகற்காய், பீர்க்கங்காய், கத்தரி, வெண்டை, புடலை, வெங்காயம், கீரை என பல வகையான காய்கறிகளை பயிரிட துவங்கினார்.
சொட்டுநீர் பாசனம் மூலம் காய்கறிகள் விவசாயம் செய்ய ஆரம்பித்தவர் வியபாரிகளிடம் விற்காமல் நேரடியாக விற்பனை செய்து பார்ப்போம் என முடிவெடுத்தார்.
தனது தோட்டத்திற்கு எதிர்புறம் சாலை ஓரத்தில் கொட்டகை அமைத்து ப்ரஷ்ஷாக காய்கறிகளை விற்க ஆரம்பித்தார்.
மார்க்கெட் விலையை விட குறைவான விலையில் ப்ரஷ்ஷாக காய்கறிகள் இருப்பதால் நிறைய பேர் தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.
நெல். கரும்பு கைவிட்டாலும் காய்கறிகள் கைவிட வில்லை
குறைந்த நீரை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார் விவசாயி குமரேசன்.