ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...எது குறித்த ஆலோசனை தெரியுமா?

ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...எது குறித்த ஆலோசனை தெரியுமா?
Published on
Updated on
1 min read

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தொடங்கியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தொடங்கியுள்ளது. 

மேள தாளங்களுடன் வரவேற்பு:

முன்னதாக, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்காக ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்த எடப்பாடி பழனிசாமிக்கு, மேள தாளங்கள் முழங்க மாவட்ட செயலாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை:

இந்நிலையில் தற்போது தொடங்கி நடைபெறும் வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுக பொது செயலாளர் தொடர்பான வழக்கு வரும் ஜனவரி 4 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், இந்த வழக்கு குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்:

மேலும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி கூடுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளார். இதனால் இந்த விவகாரம் குறித்தும், அரசுக்கு எதிராக போராட்டங்கள்  முன்னெடுப்பது குறித்தும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்:

இந்த பின்னணியில், கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவர் நியமித்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com