அ.தி.மு.க.வின் வளர்ச்சியை தடுக்கவே லஞ்ச ஒழிப்பு சோதனை... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...

திமுக அரசியல் காழ்புணர்ச்சிக்காகவும், ஒரு கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்க்காகவும் மட்டுமே தற்போது நடைபெறும் இந்த சோதனை பாஜக கருதுகின்றது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வின் வளர்ச்சியை தடுக்கவே லஞ்ச ஒழிப்பு சோதனை... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலையில் பாஜகவின் சார்பில் நடைபெற்ற திருவண்ணாமலை கோட்டத்திற்கு உட்பட்ட மண்டல தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாகவும், இந்த தேர்தல் கட்சியின் வளர்சிக்கு வாய்ப்பாக கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும் கட்சியின் வளர்ச்சிக்கு உள்ளாட்சி தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது என்றும் இதன் மூலம் மக்களுக்கு அடுத்த கட்ட தலைவர்களை அறிமுகம் செய்து வைப்பதற்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகம் என்பது அரசியல் நாகரீகம் மிகுந்த மாநிலமாக உள்ள மாநிலம் என்றும், தமிழக முதல்வர் எதிர்கட்சி தலைவராக உள்ள போது என் குற்றங்களை அதிமுகவின் மீது சென்னாரோ அதன் அடிப்படையில் தான் தற்போது முன்னாள் அமைச்சர்களின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகின்றது என்றும் அதனால் தான் தி.மு.க. அரசியல் காழ்புணர்ச்சிக்காகவும், ஒரு கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும் மட்டுமே தற்போது நடைபெறும் இந்த சோதனை பாஜக கருதுகின்றது என்று கூறிய அவர், லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை சம்பந்தமாக ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழக மக்களுக்கு பொங்கலை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், லஞ்ச லாவண்யம் இல்லாத புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதும் மற்ற கட்சிகள் செய்த தவறுகளை பாஜக செய்ய கூடாது என்றும் மற்றகட்சிகள் செய்த தவறுகளை செய்து ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பாஜக விழிப்புடன் உள்ளதாகவும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு திட்டங்களை சொல்லி வாக்குகள் சேகரிப்போம் என்றும், மத்திய அரசு ஏராளமான திட்டங்களை உள்ளாட்சிகளுக்கு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முப்படை தலைமை தளபதி  விபத்தில் தமிழக அரசு மற்றும் முதல் அமைச்சர் உட்பட அவைரும் 100க்கு 100 சதவிகிதம் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றும், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் இறந்த விபத்தில் தமிழகம் நடந்து கொண்ட விதம் இந்தியாவே பெருமை படும் நிலையில் தமிழகம் நடந்து கொண்டது என்றும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com