மருத்துவமனை வளாகத்தில் உலா வந்த கரடி...  பொதுமக்கள் அச்சம்....

மருத்துவமனை வளாகத்தில் உலா வந்த கரடி... பொதுமக்கள் அச்சம்....

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் மருத்துவமனையில் வளாகத்தில் உலா வந்த கரடியை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Published on

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பகலாக கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அப்படி நடமாடும் கரடிகளால் பொதுமக்களுக்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி அருகே தனியார் மருத்துவமனை வளாகத்தில் அதிகாலையில் ஒன்று உலா வந்துள்ளனது. இதனைகண்ட பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் வளாகத்தில் சுற்றிதிரிந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com