“முதல்வர் வந்து எட்டிக்கூட பாக்கல..” சேகர் பாபுவுக்கு என்ன வேலை!? - வலுக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! கொந்தளிப்பில் மக்கள்!!

12 நாட்களாக இங்கேதான் இருக்கிறோம், அமைச்சர்களும் அதிகாரிகளும் பின்வாசல் வழியா போறாங்க வராங்க...
sanitory workers protest
sanitory workers protest
Published on
Updated on
2 min read

சென்னை மாநகராட்சியில் 4  மற்றும்  5ஆம் மண்டலங்களில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின்  பணியை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12-ஆவது  நாளாக சென்னை மாநகராட்சி அலுவலகம்  தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது​வரை 6 கட்ட பேச்​சு​வார்த்​தைகள் முடிந்​து, தீர்வு எட்​டப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தலை​மை​யில், மேயர் ஆர்​.பிரியா, ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் 7-ம் கட்ட பேச்​சு​வார்த்தை ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் உழைப்​போர் உரிமை இயக்க பிர​தி​நி​தி​கள் மற்​றும் தூய்​மைப் பணி​யாளர்​கள் ஈடு​பட்​டனர்.

இந்த போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, நாதக உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரடியாக களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.இந்த நிலையில் மக்கள் எம்மாதிரியான உளவியலில் வாழ்கின்றார்கள் என்பதை அறிய நமது மாலைமுரசு குழு நேரடியாக களத்திற்க்கு சென்றது, 

அங்கு பார்த்த காட்சிகள் உண்மையிலேயே வியக்க வைத்தன. தூய்மை பணியாளர்கள் மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர். 1000 -க்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில், 8 ஆவது நாள் இரவிலிருந்து மழை பெய்து வருகிறது. ஆனால் இந்த மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் ரிப்பன் கட்டிடம் வாசலில் உள்ள கால்வாயில் அதிகரிக்கும் நீரை கூட அவர்களே சுத்தம் செய்கின்றனர், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில பெண் தூய்மை பணியாளர்களை சந்தித்தோம் அவர்களோடு பேசுகையில், “12 நாட்களாக இங்கேதான் இருக்கிறோம், அமைச்சர்களும் அதிகாரிகளும் பின்வாசல் வழியா போறாங்க வராங்க, யாருமே எங்கள் கோரிக்கையை கேட்பதற்கு இல்லை. இதுநாள் வரையில் முதல்வர் வந்து எங்களை சந்திக்கவே இல்லை.

அமைச்சர் சேகர்பாபு விற்கும்  இதற்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை. எப்ப வேண்டுமானாலும் எங்களை கைது செய்ய போலீஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன,  வெறும் 15,000 ரூபாய் சம்பளம் எங்கள் பிள்ளைகள் படிப்புக்கும்  வாடகைக்குமே  சரியா போயிடும்.. நாங்க எப்படி சாப்பிடறது. அடுத்த மாசத்த எப்படி ஊட்ட போறோம்னு நெனச்சாலே கவலையா இருக்கு. எங்க மனக்கவலை யாருக்குமே புரியாது. 

மேலும் பேசிய அவர் “அதிமுக சார்பில் சிலர் வந்தனர், சீமான் வந்தார், பிரேமலதா வந்தார் ஆனால் இதுவரையில் முதல்வர் எங்கள் போராட்ட குழுவை கூட தொடர்பு கொள்ளவில்லை. எங்கள் கோரிக்கைகளை அமைச்சர்கள் கிட்ட சொன்னா “நாங்க என்ன எழுதி கொடுத்துருக்கோமா.? ஆதாரம் இருக்கானு சேகர் பாபு கேக்கறாரு..ஆனால் ஆதாரம் இருக்கு, அவர்கள் கொடுத்த வாக்குறுதி முதற்கொண்டு பேனர் -ல போட்டுட்டு உக்காந்துருக்கோம். 

அருகில் இருந்த மற்றொருவர் கையில் கட்டுடன் அமர்ந்திருந்தார் அப்போது அவரிடம் விசாரித்தபோது, “தூய்மை பணி செய்யும்போது கையில் பாட்டில் குத்திவிட்டதாக சொன்னார். அவரின் மக்களுக்கு இன்று இறந்த நாளாம்.. ஒரு நல்ல நாளில் கூட பிள்ளைகளுடன் செலவழிக்க முடியாமல் வேலையையும், வாழ்வுரிமையையும் காத்து கொள்ள மக்கள் போராடுகின்றனர் ”

இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் கழிவு மேலாண்மை என்பது கொஞ்சம் கூட சரி இல்லை. தலைநகர் சென்னையில் உள்ள எத்தனை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இப்பொது இயக்கத்தில் உள்ளன? என்றால் அது பெரும் கேள்வி குறிதான்.  இருப்பதிலும் இன்னும் கேடு, “மலக்குழி” மரணங்கள், நமது அன்றாடங்களில் தூய்மை பணியாளர்களின் இருப்பை நம்மால் தவிர்க்கவே முடியாது. ஆனால் எப்படி அரசு “கண்ணிருந்து குருடாய் இருக்கிறது” என்பது விளங்கவில்லை.2,000 குடி மக்கள் மழையிலும், வெயிலிலும் கத்திக்கொண்டிருக்க அரசு இப்படி பாராமுகமாய் இருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

இந்த செய்தியை பதிவிடும் போதுகூட ஒரு செய்தி வந்தது, அரசு போராட்டத்தை கைவிட்டுவிட்டு வேலைக்கு திரும்புமாறு  அறிவுறுத்தியும், என்ன ஆனாலும், உயிரே போனாலும்  போரட்டத்தை கைவிட மாட்டோம் என மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 15 - ஆம் தேதி சுதந்திர நாள் அன்று மாபெரும் போராட்டத்தை ரிப்பன் கட்டிடம் எதிரில் நடத்த உள்ளனர். ஆனலத்திற்குள் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு வேண்டும் என அரசு நினைக்கிறது, ஆனால் போராட்டக்காரர்களோ நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றனர். அரசு தூய்மி பையாளர்களின் கோரிக்கைக்கு செவிமெடுக்குமா என்பது தெரியவில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com