
சென்னை வியாசர்பாடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கி வழங்கினார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
இக்கட்டான இந்த மழை காலத்தில் திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும்
மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை என்றும் இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறைக்கூறி விசாரணை நடத்தப்படும் எனக்கூறி வருவதாக அவர் தெரிவித்தார்.
.தொடர்ந்து பேசிய அவர், 4நாட்களாக மழை வெள்ளத்தால் பொதுமக்கள் அவதியுறும் நிலையில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புளுகை மூட்டைகளின் மொத்த உருவமே திமுக தான், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒன்றை கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர்கள், எங்களை பொய் கூறுவதாக கூறி வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.