ரூ.25.14 கோடி மதிப்பிலான நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...!

Published on
Updated on
1 min read

நீலகிரி வரையாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், வனத் துறையின் சார்பில் 25 கோடியே 14 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள நீலகிரி வரையாடு திட்டத்தை தொடக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வனத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் மாநில விலங்காக உள்ள வரையாடு அழிந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தப்படவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்ட விருதுகளை பார்வையிட்டு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை 19 விருதுகளை சுகாதாரத் துறை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது..

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com