இயற்கையை உருவாக்க முடியாது...காக்க தான் முடியும்...பொதுமக்களை அழைக்கும் ஸ்டாலின்!

இயற்கையை உருவாக்க முடியாது...காக்க தான் முடியும்...பொதுமக்களை அழைக்கும் ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

இயற்கையை பாதுகாக்க பொது மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இயற்கையை காக்க வேண்டும்:

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகிழம் பூ மரக் கன்றுகளை நட்டு 'பசுமை தமிழகம்' இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 32 கோடி மரக் கன்றுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது என்பதால், இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார். நீர் நிலைகள் மற்றும் காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். 

மஞ்சப்பை திட்டம்:

பிளாஸ்டிக்கை ஒழிக்கவே மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாக கவலை தெரிவித்தார்.

முன்னதாக, பாரம்பரிய விதைகள், காடுகள், மரங்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய கண்காட்சியினை முதலமைச்சர் பார்வையிட்டார். விழாவில் அமைச்சர்கள் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com