
தேனியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
தமிழகத்தில் முதல்வராக இருந்து கொண்டு நேற்றைய அறிவிப்பில் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்.
ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயனோ மரங்களை வெட்ட, தான் அனுமதி தரவில்லை என பதில் கடிதம் எழுதியுள்ளார். எதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல்வர் நன்றி சொன்னார் என தெரியவில்லை. இது 8.5 கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அசிங்கம், இதற்கு தமிழக முதல்வர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையின் உரிமையான 142 அடி நீர் தேக்கத்தை போராடிப் பெற்றுத் தர வேண்டும் என்றும் இதை செய்யாவிட்டால் ஒரு லட்சம் தமிழக விவசாயிகள் பாரதி ஜனதா கட்சியினரை திரட்டி முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று மாபெரும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.