ஏழை எளிய மக்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!!!

ஏழை எளிய மக்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் 4,644 குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு வீடு மற்றும் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோட்டில் 1176 குடியிருப்புகள், கோயம்புத்தூர் 1120 வீடுகள், மதுரையில் 912 குடியிருப்புகள், புதுக்கோட்டை 384 வீடுகள், திருப்பூர் 380 வீடுகள், கரூர் 288 வீடுகள், கடலூர் 240 குடியிருப்புகள், சேலம் 144 குடியிருப்புகள் என ரூ.406 கோடியில் 4,644 குடியிருப்புகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து குடியிருப்புகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

மேலும், 4,500 வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.237 கோடியில் 11,300 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும், 350 பயனாளிகளுக்கு உரிமை ஆவணங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் வழங்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலாளர் இறையன்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com