'மக்களுடன் ஸ்டாலின்' செயலியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சா் முக ஸ்டாலின்!

Published on
Updated on
1 min read

வேலூரில் இன்று நடைபெறவுள்ள திமுக பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழாவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். 

வேலூரில் இன்று திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதற்காக கந்தனேரியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார். தொடா்ந்து 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். நிகழ்வில் பெரியார், அண்ணா, கலைஞர் பெயரிலான விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் அரசு விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். 

முதலமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் காட்பாடி சென்றடைந்தாா். ரயில் நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலா் லந்து கொள்கின்றனர். 
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com