தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை.....காரணம் என்ன?!!

தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை.....காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடு கட்டி வாழ்வோரை தொல்லை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை என்றும், ஆனால் நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நிலங்கள் வகை மாற்றம்:

சென்னையில் உள்ள 6 முக்கிய நீர் நிலைகளிலும் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை, அவர்களது வீடுகள் இடிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா கேட்டுக்கொண்டார்.

நீதிபதி முன்பு:

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், நீர்நிலை பகுதியில் வாழ்வோர் ஏழைகள் , அவர்களை தொல்லை செய்ய வேண்டும் என எங்களுக்கும் ஆசையில்லை என கூறிய அவர், நீர்நிலை புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு சென்று நிற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும், அனைத்து நீதிமன்றங்களுமே நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்ற வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேறு வழியில்லை:

மேலும், நீர்நிலைப் புறம்போக்கில் வாழ்வோர் குறித்து கருணை ஒருபக்கம் இருப்பதாகவும், நீதி ஒருபக்கம் இருப்பதாகவும், ஆனால் வேறு வழியில்லை , நீர் நிலை புறம் போக்குகளை அகற்றித்தான் ஆக வேண்டும் எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com