சைக்கிளில் சென்று அதிரடியாக ஆய்வு நடத்திய ஆட்சியர்..!

புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் சைக்கிளிலேயே பயணம் செய்து மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.
சைக்கிளில் சென்று அதிரடியாக ஆய்வு நடத்திய ஆட்சியர்..!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் பாதிப்பு தலைத்தூக்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, தமிழகம் முழுவது, இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து, தனியாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சாலையில் முகக் கவசம் அணியாமல் சென்ற இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணியுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு அது நல்லது என்று அறிவுரை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com