"நீட்டுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவின் உண்மையான அஞ்சலி செலுத்தும், நாள்" முதலமைச்சர்!!

"நீட்டுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவின் உண்மையான அஞ்சலி செலுத்தும், நாள்" முதலமைச்சர்!!
Published on
Updated on
1 min read

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவிற்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலாவதாக சென்னை கொளத்தூர் வீனஸ் பகுதியில் உள்ள எவர்வின் பள்ளியில் அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்கு மடிக்கணினி, தையல் இயந்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். அத்துடன், நீட் தேர்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நாளே அனிதாவிற்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள் என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் உள்ள மாணவ மாணவிகள் பட்டபடிப்போடு தனி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று  காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்க உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் என்றார்.

இதை தொடர்ந்து திருவிக நகர் பேருந்து நிலையத்திற்கு 6.27 கோடி ரூபாய் மதிப்பில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட உள்ள நிலையில் அதற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com