அய்யா! தாங்கள் ஜனாதிபதி அல்ல!.. ஆளுநருக்கு இருக்கும் கடமையை கூட சரியாக செய்யாமல், அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் - முரசொலியில் விமர்சனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடமையை சரியாக செய்யாமல், அவசியமற்ற அரசியல் செய்து வருவதாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
அய்யா! தாங்கள் ஜனாதிபதி அல்ல!.. ஆளுநருக்கு இருக்கும் கடமையை கூட சரியாக செய்யாமல், அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் - முரசொலியில் விமர்சனம்
Published on
Updated on
1 min read

தன்னை ஏதோ ஜனாதிபதியாக ஆளுநர் நினைத்துக் கொள்கிறார் என முரசொலியில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டியது தான் ஆளுநரின் வேலையே தவிர, அப்படியே வைத்திருப்பது அவரது வேலை அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு இருக்கும் கடமையைக் கூடச் சரியாகச் செய்யாமல் - அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை தானே கவனிக்கலாம் என்று நினைத்து விட்டாரா ஆளுநர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com