
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தேர்தல் பணி முடித்து வீட்டுக்கு சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவளையப் மேட்டுத்தெருவை சேர்ந்த சுரேஷ், பனப்பாக்கம் அருகே உள்ள மேலபுலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 15 - வது வார்டில் தேர்தல் அலுவலராக பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தேர்தல் பணியை முடித்துவிட்டு சிறுவலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலை அருகே இருந்த பள்ளத்தில் வாகனத்துடன் கவிழ்ந்து விழுந்தார். இதில் பள்ளத்தில் இருந்த நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.