"எமனாக வந்த எலெக்டிரிக் ஸ்கூட்டர்".. திடீரென வெடித்ததால் தந்தை மகள் உடல் கருகி பலியான சோகம்!!

"எமனாக வந்த எலெக்டிரிக் ஸ்கூட்டர்".. திடீரென வெடித்ததால் தந்தை மகள் உடல் கருகி பலியான சோகம்!!

வேலூரில் விடியற்காலையில் எலெக்டிரிக்கல் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் வீட்டிலிருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பற்றியது. தந்தை மகள் உடல் கருகி பலியாகினர்.
Published on

வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவில் வசிப்பவர் போட்டோகிராப்பர் துரைவர்மா. இவரது மகள் மோகன பிரீத்தி போளூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாக எலெக்டிரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார் துரை. அதனை இன்று விடியற்காலை வீட்டினுள் நிறுத்தி ரீசார்ஜ் செய்ய முயன்ற போது அந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதனால் அருகிலிருந்த மற்ற இரண்டு சக்கர வாகனங்களும் தீப்பற்றியது.  இந்த தீயில் துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் சம்பவ இடத்திலேயே தீயில் சிக்கி உடல் கருகி பலியானார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் தெற்கு காவல்துறையினர் இரண்ட உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருததுவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்துச் சிதறி தந்தையும் மகளும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com