செந்தில் பாலாஜி வழக்கில் பறிமுதல் செய்த சொத்து விபரங்களை வெளியிட்டது அமலாக்கத்துறை...!

செந்தில் பாலாஜி வழக்கில்  பறிமுதல் செய்த சொத்து விபரங்களை வெளியிட்டது அமலாக்கத்துறை...!
Published on
Updated on
1 min read

சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மேற்கொண்ட சோதனையில்  22 லட்சம் ரூபாய் கைப்பற்றபட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 3ம் தேதி, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில்,  22 லட்சம் ரூபாய் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள்,  நிலங்கள் தொடர்பான சந்தேகத்திற்குரிய 60 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவுற்ற நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com