அறநிலையத்துறை ஆணையருக்கு கையில் காலணியை கொண்டுவந்து கொடுத்த பெண் ஊழியர்...! சர்ச்சை ஏற்படுத்தியுள்ள சம்பவம்...!

அறநிலையத்துறை ஆணையருக்கு கையில் காலணியை கொண்டுவந்து கொடுத்த பெண் ஊழியர்...! சர்ச்சை ஏற்படுத்தியுள்ள சம்பவம்...!
Published on
Updated on
1 min read

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வருகிற ஜனவரி 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் ஆய்வில் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வு முடிந்த பின்னர், கோவிலை விட்டு வெளியே வந்த அமைச்சர் புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளிய வந்த போது காரில் ஏறி செல்வதற்கு முன்பாக கோவிலில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர், ஆணையரின் காலணியை கையில் கொண்டு கொடுத்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் ஊழியர் காலணியை கையில் கொண்டுவரும்போது, அவர் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் காலணியை போட்டுக்கொண்டு காரில் ஏறி சென்று விட்டார். இதனை அங்கிருந்த பலரும் கவனித்துள்ளனர். இது பெரும் பேசு பொருளாகிவிட்டன. அந்த பெண்ணிடம் அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com