”திராவிட மாடல்” ஒருமாதிரி இருக்கு முதலமைச்சருக்கு அட்வைஸ் செய்த ஆளுநர்

தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் திராவிட மாடல் மாடல் தமிழா என கேள்வி எழுப்பியுள்ளார்
”திராவிட மாடல்” ஒருமாதிரி இருக்கு முதலமைச்சருக்கு அட்வைஸ் செய்த ஆளுநர்
Published on
Updated on
1 min read

தெலுங்கானா  ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்

தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் புதுவையின் துணை நிலை ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார். தமிழக பாஜகவில் இவருக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் கணிசமானது. தற்போது அண்டை மாநிலத்தில் பொறுப்பு வகித்து வந்தாலும் தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆளுநர் என்பதை தாண்டி பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயலாற்றி வருவதாகவும் தமிழிசை மீது விமர்சனங்கள் உள்ளன.

திராவிட மாடல்

திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை வைக்கலாம். மாடல் என்பது தமிழ் வார்த்தையா? முத்தமிழர் அறிஞர் கலைஞரின் மகன் திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை பயன்படுத்தலாம் என்று முதலமைச்சருக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் அட்வைஸ் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com