குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். விசாகப்பட்டினத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் துணை குடியரசு தலைவர் காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியேர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், ராமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்று ராஜ்பவன் செல்லும் அவர், நாளை ஐ.ஐ.டியில் நடைபெறும் நிகழ்விலும், நாளை மறுநாள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்கிறார்.
வெள்ளியன்று சிறப்பு விமானம் மூலம் புறப்படுகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதன் முறையாக துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.