தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை...ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை...ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!

Published on

ஆன்லைன் சூதாட்டத்துக்கு  தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் அவலங்கள் அதிகரித்தன. இதனை தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்துக்கு  தடை விதிக்கும் சட்டத்துக்கு அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 

இதையடுத்து, தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த குழு, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பான அறிக்கையை அளித்தது. மேலும், இந்த விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் கருத்துகள் பெறப்பட்டன. 

இந்த நிலையில், சட்டத்துறை ஆலோசனையுடன் முழு வடிவிலான அவசரச்சட்டம் தயாரிக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. 

இந்த தடைச்சட்டம் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று ஆன்லைன் சூதாட்டத்துக்கு  தடை விதிக்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com