இதுக்கு மேல கொடுக்க ஒன்னும் இல்ல ... 16 லட்சத்தை வாங்கிட்டு இறந்தவரின் உடலை தர மறுத்த  மருத்துவமனை... 

இறந்தவரின் உடலை கொடுக்காமல் செயல்படும் மருத்துவமனை நிர்வாகம் குறித்து, சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதுக்கு மேல கொடுக்க ஒன்னும் இல்ல ... 16 லட்சத்தை வாங்கிட்டு இறந்தவரின் உடலை தர மறுத்த  மருத்துவமனை... 
Published on
Updated on
1 min read

கோவையில் கொரோனா சிகிச்சைக்காக 20 லட்சம் கட்டணம் விதித்து இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காதர் என்பவர் உயிரிழந்தார்.16 லட்சம் கட்டணம்  செலுத்திய பின்னரும் மீதி பணத்தை செலுத்தி விட்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் தலையிட்டு உடலை பெற்றுக்கொடுத்தனர்

கோவை குனியமுத்தூர் திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த காதர் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  மனு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கான கட்டணமாக 20 லட்ச ரூபாய் பில் போட்டுள்ளது. அந்த மருத்துவமனை நிர்வாகம். இதில் 16 லட்ச ரூபாயினை காதர் குடும்பத்தினர் செலுத்தி இருந்தனர்.

இந்நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர்  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.16 லட்சம் கட்டணம் செலுத்திய  நிலையிலும்  மீதமுள்ள  4லட்ச ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உடலை கொடுக்க மறுப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் காதரின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய கொரொனா தடுப்பு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்,மருத்துவமனை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்திரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com