ரோகிணி தியேட்டர் தீண்டாமை விவகாரம் குறித்து கண்டிப்பாக உாிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு பயிற்றுநர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், ஆண்டு தோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி மூலம் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறிய அவரிடம், ரோகிணி தியேட்டர் குறித்து கேட்கப்பட்டபோது தீண்டாமை சம்பவம் கண்டிக்கத்தக்கது எனவும் இதுகுறித்து அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் கண்டிப்பாக உாிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
தொடா்ந்து அவா் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடலில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக என்ற ஒரு கட்சியே கிடையாது அது ஒரு ஆடியோ வீடியோ கட்சியாகத்தான் உள்ளது என விமா்சித்துள்ளாா். மேலும் பிரதமர் மோடி அதானிக்கு அனைத்தையும் வழங்கிவிட்டாா் அவா் பாராளுமன்றத்தை மட்டும் தான் இன்னும் வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
இதையும் படிக்க: பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி....!!!