தொடங்க உள்ளது இந்திய நாட்டிய விழா...! பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு...!

தொடங்க உள்ளது இந்திய நாட்டிய விழா...! பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு...!

Published on

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா தொடங்க உள்ளது.

சென்னை, மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் இந்திய நாட்டிய விழா, வரும் 23 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து உணவுத் திருவிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் பாரத நாட்டியம், குச்சிப்புடி, கதக், மோகினியாட்டம், ஒடிசி மற்றும் கதகளி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களும் இடம்பெற உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் விழா ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com