
முல்லை பெரியாறு அணையிலிருந்து, கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணைக்கு சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் உரிமையை தி.மு.க. அரசு விட்டுக்கொடுப்பதாக விமர்சனங்கள் எழத் தொடங்கின. மேலும், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அ.தி.மு.க., தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார். இரண்டு நாட்களுக்கு தேக்கடியில் தங்கி விரிவான ஆலோசனை நடத்தி, படகில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பிலும் செய்யப்பட்டுள்ளன.