திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி...!

திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி...!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள நல்லம்மா நாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் திருத்தலத்தின் 139 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள நல்லம்மா நாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோனியார் திருத்தலத்தின் 139 ஆம் ஆண்டு பெருவிழாவை, 17, 18, 19 ஆகிய தேதிகளில் கொண்டாடுவதற்கு கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன் முதல் நிகழ்வாக இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 

முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தனர். 

அதன்படி, ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு வைத்துள்ள காளையின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் மட்டும் களத்தில் இறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அந்தவகையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 500 காளைகளும் மற்றும் 175 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் வாடிவாசலில் சிறப்பாக களத்தில் நின்று விளையாடக்கூடிய காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு , வெள்ளி காசு, சைக்கிள், கட்டில், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருள்கள்  விழா குழு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com