"கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும்" அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நெகிழ்ச்சி...!!

"கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும்" அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நெகிழ்ச்சி...!!
Published on
Updated on
2 min read

"கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும்" என முன்னாள் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அமைச்சராக பதவி ஏற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மை துறை  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ்க்கு, பால்வளத்துறை  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பால்வளத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் நாசர் நீக்கப்பட்ட நிலையில்,  மனோ தங்கராஜுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 


இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் புதியதாக பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அப்பதிவில் "கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து,  "நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்" என அறிவுறுத்தியுள்ள அவர் உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான முதன்மையான துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப ஒதுக்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று நிதியமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்கம் தென்னரசுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர் ஏற்கனவேஎட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளை ஏற்றுள்ள தங்கம் தென்னரசு படைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com