ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பி வசமாக சிக்கிய கணித ஆசிரியர்.....போக்சோவில் கைது செய்த போலீஸ்....!!

சென்னையில் ஆன்லைன் வகுப்பின்போது வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச வீடியோ லிங்க் அனுப்பிய கணித ஆசிரியரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பி வசமாக சிக்கிய கணித ஆசிரியர்.....போக்சோவில் கைது செய்த போலீஸ்....!!
Published on
Updated on
1 min read

சென்னை திருமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மதிவாணன். 40 வயதான இவர், ஆன்லைன் வகுப்பின்போது மாணவர்களும், பெற்றோர்களும் உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச வீடியோ லிங்க்-ஐ அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், கணித ஆசிரியர் மதிவாணனிடம் பள்ளி நிர்வாகம் துறை ரீதியிலான விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ஆபாச வீடியோ லிங்க்-ஐ வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பியது உண்மை என தெரியவந்தது.

அதன்பட ஆசிரியர் மதிவாணன் மீது பள்ளி நிர்வாகம் சார்பில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கணித ஆசிரியர் மதிவாணன்-ஐ திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com