மெழுகுவர்த்தி கேட்டு கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்: தந்தையை அடித்து கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன்...

திருவள்ளூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தந்தையை கட்டையால் அடித்தும் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெழுகுவர்த்தி கேட்டு கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்: தந்தையை அடித்து கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன்...
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம்,  வெங்கத்தூர் துலுக்கானத்தம்மன்  தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். அவரது மனைவி மகேஸ்வரி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்  தனது மனவளர்ச்சி குன்றிய மகன் பாண்டியனுடன் வசித்து வந்துள்ளார். மணவளநகர் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் தினக் கூலியாக வேலை பார்க்கும் இவருக்கும், மகன் பாண்டியனுக்கும் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலகிருஷ்ணன்  ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் மனநலம் குன்றிய பாண்டியன், பாலகிருஷ்ணனிடம் மெழுகுவர்த்தி கேட்டதாகவும் இதனை கொடுக்க தாமதம் ஏற்பட்ட அதனால் கோபமடைந்த பாண்டியன் தனது தந்தையை வீட்டு மாடியில் வைத்து கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com