லிப்டில் சிக்கிய அமைச்சர்!!!ஆடிப்போன மருத்துவமனை...

லிப்டில் சிக்கிய அமைச்சர்!!!ஆடிப்போன மருத்துவமனை...
Published on
Updated on
1 min read

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவிற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கைசிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்திற்கு வருகை தந்தார்.

ஒவ்வொறு நிகழ்ச்சியாக துவக்கி வைத்து விட்டு கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு மூன்றாவது தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு வருகை தந்த அவர் லிப்டில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக லிப்டின் இயக்கம் தடைப்பட்டது.இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள கை அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள லிப்டில் அமைச்சர் மா சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, கலாநிதி வீராசாமி, மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி ஆகியோர் லிப்ட் கோளாறு காரணமாக சில நேரம் சிக்கிக்கொண்டனர்.

செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பின்னர் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் லிப்டின் ஆபத்துக் கால கதவின் வழியே வெளியேறினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com