ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த விவகாரம்” கோவையில் இருவர் கைது ! என்.ஐ.ஏ விசாரணை !

கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் மூளை சலவை செய்து தீவிரவாதச் சிந்தனைகள் ஊட்டி, அவர்களை அந்த அமைப்பின் வழியில் இழுத்துச் செல்ல....
national investigation department
national investigation department
Published on
Updated on
1 min read

 இந்தியா முழுமைக்கும் தீவிரவாதச் செயல்பாடுகளை விசாரணை செய்யும் தேசியப் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (NIA), கோவை பகுதியில் இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கோவை, போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அகமத் அலி மற்றும் உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜவகர் சாதிக் (எ) காரமடை ஜவகர் சாதிக் ஆகிய இருவரும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்பிற்காக ஆட்கள் சேர்க்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இவர்கள் இருவரும்,  அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் மூளை சலவை செய்து தீவிரவாதச் சிந்தனைகள் ஊட்டி, அவர்களை அந்த அமைப்பின் வழியில் இழுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகம் எழுந்து உள்ளது ..

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் அமைந்து உள்ள பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளி அலுவலகத்தில், என்.ஐ.ஏ அதிகாரிகள் இருவரையும் அழைத்து சென்று, விரிவான விசாரணை நடத்தி தற்பொழுது கைது செய்து உள்ளனர்.

இது தொடர்பாக கோவையில் காவல் துறை மற்றும் புலனாய்வு துறைகளில் பரபரப்பு நிலவுகிறது. மேலும்  விசாரணையின் பின்னணி குறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் வந்த பின்னரே கைது குறித்தான முழு தகவல்கள் தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com