பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவிலியர்!! எந்த வண்டியில் தெரியுமா?

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு  பிரசவம் பார்த்த செவிலியர்!! எந்த வண்டியில் தெரியுமா?
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரியில் பிரசவ வலியால் சாலையோரம் படுத்து கிடந்த பெண்ணை மீட்டு, ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த செவிலியருக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்தையன். கூலி தொழிலாளியான இவர் வேலை தேடி தனது கர்ப்பிணி மனைவி அருணா மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் கன்னியாகுமரி சென்றுள்ளார்.

தங்குவதற்கு வீடு கிடைக்காததால் கொட்டாரம் பகுதியில்  உள்ள ரவுண்டானா சாலையில் இவர்களது குடும்பம் தங்கியுள்ளது. அப்போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரசவ வலி தீவிரமடைந்ததால், செவிலியர் ஆதிலட்சுமி என்பவர் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆபத்தான நேரத்தில் சரியாக பிரசவம் பார்த்த செவிலியருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com