”பாராளுமன்றத்திலே ஒரு சிங்கமாக கர்ஜித்தவர்....” நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி!!

”பாராளுமன்றத்திலே ஒரு சிங்கமாக கர்ஜித்தவர்....” நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி!!
Published on
Updated on
1 min read

மதிமுக சிறுபான்மையினர் அணி சார்பாக சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ரமலான் மாத இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்டோ பங்கேற்று நோன்பு திறந்தனர். 

சிங்கமாக கர்ஜித்தவர்:

அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள் சட்டத்தின் மூலமாக இந்த சமூகத்தை ஒடுக்க நினைக்கின்ற போது, அவர்களிடம் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த சமூகத்திற்கு எதிராக சட்டங்களை கொண்டு வரும்போது பாராளுமன்றத்திலே ஒரு சிங்கமாக கர்ஜித்தவர் வைகோ எனவும் பாரளுமன்றத்தில் கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு அரணாக  இருந்தவர் வைகோ எனவும் சிறுபான்மையிருக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை வைகோ எதிர்த்தது போல நாளை துரை வைகோவும் பாராளுமன்றத்தில் எதிர்ப்பார் எனவும்   நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி கூறியுள்ளார்.

மக்கள் துணை:

மேலும் நூற்றாண்டிலேயே இப்படி ஒருவரை காணாத வகையில் வைகோ போராடி வருகிறார் எனவும் வைகோவின் சட்டப் போராட்டங்களுக்கு, மக்களும் துணை நின்றிருந்தால் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் விரோத திட்டங்களை எல்லாம் விரட்டியிருக்க முடியும் எனவும் பேசியுள்ளார்.  

அதனை தொடர்ந்து அவரோடு இணைந்து செயல்பட வேண்டும் என்கிற ரீதியில் செயல்பட்டு வருகிறோம் எனவும் திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள்தான் இஸ்லாத்தின் கோட்பாடுகள் எனவும் ஒரு ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை படைக்க வேண்டும் என்கிற திராவிட கோட்பாடு தான் இஸ்லாமிய கோட்பாடு எனவும் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com