
துருக்கி நாட்டிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் போதையில் ரகளை செய்ததால், விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணிகள் விமானம் 318 பயணிகளுடன் சென்றது. இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த மெல்னிக் யூரி என்பவர் பய்ணம் செய்தார். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, பயணி மெல்னிக் யூரி போதையில் சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
உடனே விமான பணிப்பெண்கள், போதை பயணியை அமைதி படுத்த முயன்றனர். ஆனால் பயணி விமான பணிப்பெண்களையும் தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்டதால், விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து விமானி, அவசரமாக விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்து, அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கினர். போதை பயணி ரகளையால் துருக்கி நாட்டிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.