மக்களே எனக்கு முக்கியம்.. மாஸாக என்ட்ரி கொடுத்த கள்ளக்குறிச்சி ஆட்சியர் "பத்மஜா".. வந்த உடனேயே சூடு பிடித்த களம்

"பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பார்கள் என அவசர அவசரமாக ஓடோடி வந்து.."
ஆட்சியர் பத்மஜா
Published on: 
Updated on: 
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா. சமீபத்தில் இவர் சம்பத்தபட்ட sசர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பரப்பரபை ஏற்படுதிருந்தது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாக்கு,  ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பத்மஜா-வின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை செயலருக்கு புகார் அளித்ததாகவும் சொல்லபட்டது. தற்போது இந்த புகாரில் தேசிய மகளிர் ஆணையமே தலையிட்டு, தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் விரிவான அறிக்கை கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சம்பத்தப்பட்ட MLA அருள் விக்னேஷ் பேசுகையில், இந்த செய்திகள் உண்மை இல்லை என்றும் என் மீது உள்ள வன்மங்கள் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த செய்திகள் வெகுவாக பரவிய நிலையில் பல்வேறு அரசியல்  தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு அமைப்பினர் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, TVK சட்டமன்ற உறுப்பினருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் இதுவரையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் பத்மஜா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக இந்த விவாகரத்திற்கு பிறகு, செய்தியாளர்களை முற்றிலும் தவிர்த்து வருகிறார் என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் கல்வராயன்மலையில் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்று, அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்வார் என ஆட்சியர் அலுவலக செய்தித் தகவல் குழுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த முகாமில் ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமையில் அந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டார் ஆட்சியர் பத்மஜா. பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற அவர், வயதானவர்களின் குறைகளை பணிவாக கேட்டு பெற்றுக் கொண்ட சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை, பேசுபொருளாக உள்ள ஒரு சூழலிலும், மக்கள் தான் முக்கியம்… என தான் ஏற்ற பொறுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் களத்திற்கு வந்துள்ளார் ஆட்சியர் பத்மஜா. மேலும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பார்கள் என அவசர அவசரமாக ஓடோடி வந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தனிப்பட்ட விவகாரம் பரபரப்பான சூழலில் உள்ள போதும், பொது மக்கள் சந்திப்பில் எந்த சுணக்கமும் காட்டாமல், மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல்கள், கள்ளக்குறிச்சி மக்கள் நலனில் அவர் கொண்டுள்ள ஆர்வத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. ஆட்சியர் பத்மஜா-வின் இந்த செயல்கள், கள்ளக்குறிச்சி மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் வெகுவான பாராட்டைப் பெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.