ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர்...! வழக்கு பதிவு செய்த போலீசார்...!

ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர்...! வழக்கு பதிவு செய்த போலீசார்...!
Published on
Updated on
1 min read

ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலரை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரை தரக்குறைவாகப் பேசி மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நியூ ஆவடி சாலையில், ஹெல்மெட் அணியாமல் காவலர் கிருஷ்ண குமார் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். இதை கண்ட சமூக ஆர்வலர் காசிமாயன் காவலரிடம் ஹெல்மெட் அணியுமாறு கூறியதற்கு, அவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த காவலரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து காவலர் கிருஷ்ணகுமாருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதாக நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக காவலர் மீது அபராதம் விதிக்கப்பட்டது, ஆனால் தன்னை ஆபாசமாக பேசி மிரட்டியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் காசிமாயன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் சமூக ஆர்வலர் காசிமாயனை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த காவலர் கிருஷ்ணகுமார் மீது நான்கு பிரிவுகளின் கீழ் ஐ.சி.எப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல்,மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவலர் கிருஷ்ணகுமார் தற்போது தஞ்சாவூர் பேராவூரணி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com