பதவியேற்ற பின் முதல்முறையாக தமிழகம் வரும் குடியரசுதலைவர்...!

பதவியேற்ற பின் முதல்முறையாக தமிழகம் வரும் குடியரசுதலைவர்...!
Published on: 
Updated on: 
1 min read

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று  சென்னை வருகை. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள இருக்கிறார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும்.... தர்பார் ஹால் என்று அழைக்கப்படும் அறையானது ’பாரதியார் அறை’ என பெயர் மாற்றப்பட்டுள்ள பெயர் பலகையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உள்ளார்.

குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்து அளிக்க உள்ளதாகவும் அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரி செல்கிறார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com