தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக அவதி...

தக்காளி விலை உயர்வால், பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஒரிரு தினங்களில் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள்  கடுமையாக அவதி...
Published on
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனினும் மகாராஷ்டிராவில் இருந்து இன்னும் ஓரிரு தினங்களில் தக்காளி வர இருப்பதால், விலை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தக்காளி விலை உயர்வு பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com