பேரவையில் பாமக கவன ஈர்ப்பு தீர்மானம்..!  பதிலளித்து பேசிய முதலமைச்சர்...! 

பேரவையில் பாமக கவன ஈர்ப்பு தீர்மானம்..!  பதிலளித்து பேசிய முதலமைச்சர்...! 
Published on
Updated on
1 min read



ஆணையத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கியது ஏன்? என சட்டப்பேரவையில் ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், "இட ஒதுக்கீடு பிரச்சனை உணர்வு பூர்வமான பிரச்சனை என்பதால்தான் ஆணையம் அமைத்து பணிகளை செயல்படுத்தி வருகிறோம்" என விளக்கம் அளித்தார். 

தொடர்ந்து , 10 புள்ளி 5 சதவீத  இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தியும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கியதையும் எதிர்த்து,  பா.ம.க. உறுப்பினர் ஜி.கே. மணி, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

தீர்மானத்தின் மீது பேசிய ஜி.கே. மணி,  பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆறு மாத காலம் நீடித்தால், மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் போய்விடும் என்றும்  கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலரமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி இருந்தபோது 69 சதவீதம் இட ஒதுக்கீடு தந்தார் என்றும், 

தற்போது நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்ட நிலையில், ஆணையம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், ஆணையத்தின் விருப்பத்தின் அடிப்படையில் தான் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், இது உணர்வு பூர்வமான பிரச்சனை என்பதால் அனைவில் பொறுமையாக கையாள வேண்டும் என விளக்கம் அளித்தார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com