நீட் விவகாரத்திற்கு சரியான  முடிவு எட்டப்படும்... கனிமொழி எம்.பி. உறுதி...

நீதிமன்றம் மறுத்த விஷயங்கள் ஒன்றிய அரசு மறுத்த பல விஷயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அதே போல நீட் தேர்வுக்கும் சரியான முடிவு எட்டப்படும் என    கனிமொழி தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்திற்கு சரியான  முடிவு எட்டப்படும்... கனிமொழி எம்.பி. உறுதி...
Published on
Updated on
1 min read

சென்னை அண்ணாநகர் வடக்கு, சத்யா நகர் பகுதியில் திமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி,எம்.பி. கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நீட் தேர்வை பொறுத்தவரை கண்துடைப்பிற்காக செயல்பட்டது அதிமுக, மாணவர்களின் நலனுக்காக, சமூக நீதிக்காக  செயல்படுவது திமுக என கூறினார். 

நீட் தேர்வு மூலம் நடைபெறும் அநியாயமான சூழலை நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் தொடர்ந்த் உணர்த்துவோம் என்றும் மாணவர்கள் உயிரிழப்பு என்பது அனைவருக்கும் வலியை தரக்கூடியது இதை வைத்து அரசியல் செய்வது சரியாசரியானது அல்ல.

திறமையான மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்து உருவாகியுள்ளார். வாய்ப்பற்றவர்களிடம் இருந்து வாய்ப்பை பறிப்பது தான் நீட் தேர்வு, நீதிமன்றம் மறுத்த விஷயங்கள் ஒன்றிய அரசு மறுத்த பல விஷயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல நீட் தேர்வுக்கும் சரியான முடிவு எட்டப்படும் என தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம். புதிய கல்விக்கொள்கை அனைவருக்காமான கல்வியை உடைத்துவிடும் கல்வியை பின்னோக்கி சென்றுசிடும் திமுக என்றும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவே குரல் கொடுக்கும் என தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, 
கலைஞர் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பெண்கள் உரிமையை பாதுகாக்க பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். பெண்கள் கூட ஆட்சியில் இருந்து இருக்கிறார்கள். ஆனால் திமுக ஆட்சியில் தான் பெண்கள் திருமண உதவி திட்டம்  கொண்டு வரப்பட்டது. பத்தாம் வகுப்பு முடித்தால் தான் திருமண உதவி கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா, ஜி.எஸ்.டி போன்ற பிரச்சனைகளால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். பேருந்தில் இலவசம் என்ற திட்டதின் மூலம் பெண்கள் மீண்டும் வீட்டில் அடைந்து விட கூடாது என்பதற்காக முதலமைச்சர் இந்த இலவச பேருந்து திட்டத்தை உருவாக்கி உள்ளார்.இதனால் பேருந்தில் பெண்கள் இலவசமாக செல்ல முடிகிறது. 

தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றியது மகளிர் அணி ஒப்பு கொண்ட மாவட்ட பொறுப்பாளர் தொடர்ந்து பணியாற்றி வர கூடிய மகளரிருக்கு வரக் கூடிய உள்ளாட்சி தேர்தலில் தானாக முன்வந்து  மக்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு வழங்க முன் வர வேண்டும் என கேட்டு கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com