பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல்ஜோடி...!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல்ஜோடி...!
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தவமணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் கல்லூரி செல்லும்போது மலர்ந்த காதல், படிப்பை முடித்த நிலையிலும் தொடர்ந்துள்ளது.

இதையறிந்த இரு தரப்பு பெற்றோர்களும், வெவ்வேறு இடத்தில் பெண் பார்க்கவும், மாப்பிள்ளை பார்க்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதையறிந்த காதல்ஜோடி  நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி கஞ்சநாயக்கன்பட்டி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து இன்று மதியம் பாதுகாப்பு கேட்டுதொளசம்பட்டி காவல் நிலையத்தில் வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடி தஞ்சம்டைந்தனர். இதனை தொடர்ந்து தொளசம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசினார். பின்னர் காதல் ஜோடியின் திருமணத்தை இரண்டு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுகொண்டனர். இதையடுத்து தனது காதல் மனைவியை பெற்றோர் சம்மதத்துடன் பார்த்திபன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com