காதல் ஜோடியை தாக்கி பெண்ணை கடத்தி சென்ற பெற்றோர்... மனைவியை மீட்டுத் தரக் கோரி காதல் கணவர் புகார்..!

ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை தாக்கி பெண்ணை கடத்திச் சென்று விட்டதாக காதல் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
காதல் ஜோடியை தாக்கி பெண்ணை கடத்தி சென்ற பெற்றோர்... மனைவியை மீட்டுத் தரக் கோரி காதல் கணவர் புகார்..!
Published on
Updated on
1 min read

சின்னியம்பாளையம் காஞ்சி நகரைச் சேர்ந்த விக்ரம் என்பவர் உஷா நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால்  பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து  கோவிலில் திருமணம் செய்து கொண்ட விக்ரமும் உஷா நந்தினியும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனிடையே காவல்நிலையம் வந்த உஷா நந்தினியின், பெற்றோர் மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் காதல் ஜோடியை தாக்கி பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து மனைவியை மீட்டுத் தருமாறு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விக்ரம் புகார் அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com