“லெஃப்ட் -ல் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பிய திமுக” - ஸ்கெட்ச் எடப்பாடிக்குத்தான்! - பகீர் கிளப்பிய சவுக்கு சங்கர்!!!

திமுக கூட்டணியில் இருந்து ஒருவேளை விசிக, காங்கிரஸ் வெளியேறினால் அவர்கள் நிச்சம்...
stalin vs eps
stalin vs eps
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு வழி ஆகிவிடும் என்பது தான் உண்மை. திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -வின் நிலை அப்படி  இல்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததில்  இருந்தே பஞ்சாயத்துதான். பாமக  -விலும் சூழ்நிலை சரியாக இல்லை. 

உண்மையில் இபிஎஸ் எப்படி  சமாளிக்கப் போகிறார் எனும் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் பாஜக திமுக இடையே கள்ள கூட்டணி நிலவுவதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் பகீர் கிளப்பி உள்ளார். 

“சமீபத்தில் துணை ஜனாதிபதி தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். உடனடியாக அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளை பாஜக -வும்,  காங்கிரஸ் -ம் துவங்கியது. பாஜக தனது தரப்பில் தமிழரான துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்தது. 

 கவுண்டரான சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்வதன் மூலம் கொங்கு மண்டலத்தில் பெரும் ஆதரவு கிடைக்கும். மேலும் தமிழரை ஆதரிக்க வேண்டும் என்ற நெருக்கடியை உருவாக்க முடியும் என்று நினைத்தது.

ஆனால் காங்கிரஸ், பாஜக கூட்டணிக்கே நெருக்கடி கொடுக்கும் விதமாக,  தெலுங்கரான, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை தங்கள் தரப்பு வேட்பாளராக நியமித்து உள்ளது. ஆனால் சந்திர பாபு நாயுடுவும், ஜெகன் மோகன் ரெட்டியும் ஏற்கனவே சி.பி.ஆர் -க்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நிச்சயம் தெலுங்கு பேசும் மக்களிடையே அதிருப்தி ஏற்படக்கூடும். ஆகவே பாஜக அரசியல் செய்தால், காங்கிரசும் அவர்களின் வேலையை காட்டுவார்கள். ஆனால் இதற்கிடையில் தேமுதிக -உடனும் பாமக உடனும் திமுக கூட்டணி சார்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளே வந்தால், விசிக இருக்காது என திமுக தலைமைக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் இதை செய்வதன் காரணம்,  விசிக, காங்கிரஸ்,  கட்சிக்கு அதிக அளவு சிறுபான்மையினரும், தலித் மக்களும்தான் வாக்களிக்கின்றனர். ஆனால் விஜய் அதில் சரிபாதி வாக்குகளை துடைப்பார் என்று சொல்லப்படுகிறது. 

ஆனால் வட மாவட்டத்தில் பாமக -விற்கு அடர்த்தியான வாக்கு வங்கி உண்டு. தேமுதிக -விற்கு பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும் அவர்களை திமுக கூட்டணியில் சேர்த்தால் அவர்களால் சோபிக்க முடியும். திமுக கூட்டணியில் இருந்து ஒருவேளை விசிக, காங்கிரஸ் வெளியேறினால் அவர்கள் நிச்சம் விஜய் -இடம் தான் செல்வார்கள். நீங்கள் நன்றாக பார்த்தீர்களேயானால் ஸ்கெட்ச் எடப்பாடிக்கு தான். பாஜக -வோடு மட்டும் கூட்டணி வைத்து அரசியல் களத்தில் தனித்து விடப்பட்டால் எடப்பாடி எப்படி ஜெயிப்பார்.  பிராந்திய கட்சிகள் ஆட்சிக்கு வருவதை பாஜக -வும் விரும்பாது.

காங்கிரஸ் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறதே திமுக என நீங்கள் நினைக்கலாம். ஆனால் லெஃப்ட் -ல் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பும் வேலையை  திமுக பலகாலமாக செய்து வருகிறது”  என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com