“தந்தையை போல மகன் தற்போது ஏமாற்றி வருகிறார்...” முன்னாள் அமைச்சர் தங்கமணி!!

“தந்தையை போல மகன் தற்போது ஏமாற்றி வருகிறார்...” முன்னாள் அமைச்சர் தங்கமணி!!
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை, கஞ்சா புழக்கம் பெருகிவிட்டது மளிகைக்கடையில் கூட சாராயம் கிடைக்கிறது.

ஜெயலலிதா பிறந்தநாள்:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது  பிறந்தநாளை முன்னிட்டு  திருவொற்றியூரில் அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் சுமார் 5775 ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள் , 3 சக்கர வண்டி, இஸ்திரி பெட்டி ,  வேட்டி சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சியாக இருந்தாலும்:

தமிழ்நாடு மட்டும் அல்ல உலகம் முழுவதும் அம்மா என்று கூறினால் ஜெயலாலிதா தான் என்றும் மக்களின் நினைவிற்கு வருவார் எனவும் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சி கூட நினைத்து பார்க்காத அளவிற்கு இந்த கூட்டம் மாநாடு போல ஏற்படு செய்யப்பட்டுள்ளது எனவும் பேசினார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி.  மேலும் ஜெயலலிதா எப்போதும் அவரது பிறந்த நாளன்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று கூறுவார் எனவும் அந்த வகையில் 5775 பேருக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

தவ வாழ்க்கை:

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஏழைகளின் ஆட்சியாக இருந்தது எனவும் அவருக்கென்று குடும்பம் வாழ்க்கை கிடையாது எனவும் அவருடைய வாழ்க்கை தவ வாழ்க்கை என வாழும் காலமெல்லாம் தமிழ்நாடு மக்களுக்கு தான் என்று சொல்லி வாழ்ந்து மறைந்துள்ளார் எனவும் கூறினார்.  மேலும் இன்று அவர் இல்லை என்றாலும் எங்களையெல்லாம் வாழ வைத்த தெய்வம் அவர் எனவும் அதிமுக ஆட்சி முடிந்து இரண்டு ஆண்டு காலம் ஆகிவிட்டது எனக் கூறிய அவர் ஆளுங்கட்சி கூட இந்த அளவிற்கு விழாவை நடத்த முடியாது என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.

வாக்குறுதிகளை:

தேர்தலுக்காக கொடுப்பது வாக்குறுதி அல்ல மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அரசின் கடமை எனவும் மற்றவர்களைப் போல் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது அதிமுக இல்லை என்று கூறுவார் எனவும் தாலிக்கு தங்கம் அதிமுக ஆட்சியில் 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது எனவும் மக்களிடம் வாக்குகளை பெற்று எப்படியாவது ஆட்சிக்கு வந்தால் போதும் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை பற்றியும், வாக்குறுதிகளை பற்றியும் கவலைப்படாமல் தற்போது ஆட்சி நடத்தி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

நிறுத்தப்பட்ட திட்டம்:

அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டம் மக்கள் மனதில் இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்து திட்டத்தையும் திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள் எனவும் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்திவிட்டார்கள் அதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று சட்டமன்றத்தில் எடப்பாடி கேள்வி எழுப்பியதற்கு அந்த திட்டத்தை நாங்கள் நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறோம் என்று கூறுகிறார்கள் எனவும் பேசினார்.

தகுந்த பாடம்:

இலவசம் என்ற வார்த்தையை கூட உபயோகிக்க கூடாது என்று சொன்ன முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எங்கே, ஒசி பஸ் என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே, என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் உரிமைத் தொகை பற்றி கேட்டால் மூத்த அமைச்சர் ஒருவர் சில்லறை மாற்றி  கொண்டிருக்கிறோம் என  கூறுகிறார் எனவும் இதை தேர்தல் நேரத்தில் கூறியிருந்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டி இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

கருணாநிதியை போலவே:

கருணாநிதி எப்படி வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றமால் மக்களை ஏமாற்றினாரோ அதேபோல் தான் அவருடைய மகன் மு.க ஸ்டாலின் தற்பொழுது வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி வருகிறார் எனவும் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு ரகசியம் வைத்திருக்கிறோம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள் எனவும் கூறினார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com